வலிமை படத்துக்கு இது டெடிகேட்!... சாந்தனு போட்ட வெறி ஆட்டம் (வீடியோ)....
போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. ஏறக்குறைய 800 தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளது. முதல் 4 நாளுக்கான ஆன்லைன் முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இடம் பெற்ற வேற மாறி பாடலை படக்குழு பல மாதங்களுக்கு முன்பே வெளியிட்டது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: சர்கார் கதை திருட்டு.! முருகதாஸ் வீட்டிற்கு வந்து கெஞ்சினார்.! பொது மேடையில் உளறிய பாக்கியராஜ்.!
இந்நிலையில், வேற மாறி பாடலுக்கு நடிகர் சாந்தனு தனது நண்பர்களுடன் செமயாக நடனம் ஆடி வீடியோவை பகிர்ந்து ‘நாளை வெளியாகும் வலிமை படம் வெற்றி பெற அப்படகுழுவினருக்கு வாழ்த்துக்கள். இது ஒரு சிறிய டெடிகேஷன்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/CaUeWEJg6TX/?utm_source=ig_web_copy_link