அந்த ஹீரோவுக்கு உடம்பு சரியில்ல... விஜய் சேதுபதியை கூப்பிடுங்க.. ஷாருக்கான் நிலைமை பாவம்...

by Manikandan |   ( Updated:2022-07-04 13:47:15  )
அந்த ஹீரோவுக்கு உடம்பு சரியில்ல... விஜய் சேதுபதியை கூப்பிடுங்க.. ஷாருக்கான் நிலைமை பாவம்...
X

தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட் வரை சென்று தடம் பதித்த ஒரு சில இயக்குனர்களில் அட்லியும் இணைந்துவிட்டார். விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து, தற்போது ஷாருக்கான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் அடுத்த வருட ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து ஒரு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் முதலில் வில்லனாக நடிக்க, நடிகர் ராணாவை தான் பட குழு பேசி வந்ததாம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேறு நடிகரை படகுழு தேடி வந்ததாம்.

அந்த வகையில் தற்போது சென்சேசஷனல் வில்லனாக வலம் வரும் விஜய் சேதுபதியை ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக அட்லி கமிட் செய்துள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எ எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்களேன் - என்னைய கழட்டி விட்டுராதீங்க ப்ளீஸ்... கதறும் காஜல் அகர்வால்... பின்னணியில் அந்த சம்பவம்..

போகிற போக்கை பார்த்தால் விஜய் சேதுபதி ஒரு ஹீரோ என்பதை மறந்து அவர் வில்லன் சேதுபதியாக உருவெடுத்து விடுவாரோ என்று அவரது ரசிகர்கள் சற்று கலக்கத்தில் தான் இருக்கின்றனர். இருந்தாலும், ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பின்னி பெடலெடுத்து விடுவார். அந்த வகையில் தற்போதைய கவலை ஷாருக்கான் மீது தான் உள்ளது என்கிறார்கள் சினிமாவாசிகள்.

Next Story