ஜவான் படத்தின் தொடர் சர்ச்சை... ஷாருக்கானிடம் செம டோஸ் வாங்கிய அட்லீ... என்ன ஜி கொஞ்சம் ஓவரோ?

atlee – SRK
அட்லீக்கு ஜவான் படத்தால் அடுத்த தலைவலி ஒன்று பிறந்து விட்டது. இந்தமுறை அவரை வச்சு செய்தது படத்தின் நாயகன் ஷாருக்கான் தான் எனக் கூறப்படுகிறது.

SRK
பாலிவுட்டில் பரபரப்பாக தயாராகி வரும் படம் ஜவான். இப்படத்தினை இளம் இயக்குனர் அட்லீ இயக்க ஷாருக்கான் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சஞ்சய் மல்கோத்ரா, யோகி பாபு, தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் 2023ம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.
சமீபத்தில் இப்படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் காப்பி தான் என அட்லீ தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் விசாரணை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், அட்லீயை ஷாருக்கான் கண்டபடி திட்டியதாக ஒரு தகவல் கிசுகிசுக்கிறது.

SRK
அட்லீ எப்போதுமே கொடுத்த பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாகவே செலவை வைப்பதாக கூறப்படுகிறது. இதே கதை தான் தற்போது ஜவான் படத்திலும் செய்கிறார். இப்படத்தினை ஷாருக்கான் தான் தயாரிப்பதால் இயக்குனரை கூப்பிட்டு வசைப்பாடி இருக்கிறார். பட்ஜெட் மிகப்பெரிய அளவில் கை மீறாமல் சீக்கிரமாக படத்தினை முடித்து கொடுக்கவும் கூறியதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.