ஒரே போட்டோ உலகம் முழுக்க ஃபேமஸ்.! கண்ணீர் விட்டு அழுத ஷாருக்.!

by Manikandan |
ஒரே போட்டோ உலகம் முழுக்க ஃபேமஸ்.! கண்ணீர் விட்டு அழுத ஷாருக்.!
X

வலையோசை, நெஞ்சினிலே போன்ற என்றென்றும் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி தனது குரல் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் லதா மங்கேஷ்கர். இவர் நேற்று மும்பையில் வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவால் காலமானார்.

அவரது மறைவிற்கு இந்திய திரையுலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது. இவரது மறைவின் காரணாமாக அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் தங்கள் பட அப்டேட்களை வெளியிட மறுத்துவிட்டனர். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் பல படங்களின் அப்டேட்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

இவரது அடக்கம் மும்பையில் நடைபெற்றது. அதில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் ஒருவர். அவர் நேரில் வந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படியுங்களேன்- போனா நான் பின்னால வருவேன்.! அஜித்தை கண்டு பின்வாங்கிய அரசியல் பிரபலம்.!

அவர், தனது இஸ்லாமிய வழக்கப்படி தொழுகை செய்வது போல கைகளை வைத்துக்கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு, பின்னர் லதா மங்கேஷ்கரின் பாதம் தொட்டு வணங்கினார். அருகில் இருந்த பெண் தனது இரு கை கூப்பி இந்து முறைப்படி வணங்கினார்.

இந்த போட்டோவும், விடியோவும் தான் தற்போதைய வைரல். இதனை பார்த்த இணையவாசிகள் இது தான் இந்தியா.

இந்து முஸ்லீம் இப்படித்தான் இருப்போம் எனவசனங்கள் எழுதி இணையத்தை தெரிவிக்க விட்டு வருகின்றனர். #SharuKhan ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

Next Story