latest news

Jailer 2: யாருப்பா அந்த பெரிய ஸ்டாரு? ‘ஜெயிலர் 2’வில் ஹைப் ஏத்தும் படக்குழு

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இரண்டாவது படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ஏற்கனவே பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் ரஜினியுடன் ஏற்கனவே பெரிய பெரிய ஸ்டார்கள் நடித்திருந்தார்கள். மோகன்லால், சிவராஜ் குமார், உபேந்திரா என பிற மொழிகளில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். அதுவே படத்தின் வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்தது. ஒரு பேன் இந்தியா திரைப்படமாக இந்த ஜெயிலர் திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் இதனுடைய அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பை அல்லது சண்டிகார் போன்ற மாநிலங்களில் படமாக்கப்படும் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஒரு பெரிய ஸ்டார் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் வேறு யாருமில்லை. ஷாருக்கான் என்று தெரிகிறது. ஏற்கனவே ரஜினியும் ஷாருக்கானும் நெருங்கிய நண்பர்களாகவே இருக்கின்றனர். கமலுடன் ஹேராம் படத்தில் நடித்திருந்தார் ஷாருக்கான். இப்போது தமிழில் முதன்முறையாக ரஜினியுடன் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவரை தவிர்த்து இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் போன்ற நடிகர்களும் புதிதாக இணைந்துள்ளனர்.

எஸ் ஜே சூர்யா தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதில் ஷாருக்கான் கேமியோ ரோலில் வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Published by
Rohini