Connect with us

தமிழ் சினிமாக்காரர்கள் ஷாருக்கானை பார்த்து கத்துக்கோங்க… அந்த ஊரு விஜயகாந்த் இவர்தான்.!

Cinema News

தமிழ் சினிமாக்காரர்கள் ஷாருக்கானை பார்த்து கத்துக்கோங்க… அந்த ஊரு விஜயகாந்த் இவர்தான்.!

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா , கிங் கான் என அழைக்கப்படம் நடிகர் என்றது அது ஷாருக்கான் தான். இவரை இந்தியாவின் ஜாக்கிசான் என்று கூட கூறலாம்  தனது நடிப்பில் ஆக்சன் எந்தளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு காமெடியும் கலந்து இருக்கும் அதனால் தான் தமிழத்திலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

தற்போது நம்ம ஊரு மாஸ் கமர்சியல் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் . இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது ஜவான் திரைப்படம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஷாருக்கான் தான். இவர் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, எல்லோருக்கும் சமமான மரியாதை கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்களேன் – ஜெயிலர் படத்தின் வெறித்தனமான அப்டேட் இதோ!…இந்த வீடியோவை சத்தியமா எதிர்பாக்கல!….

இதையும் படியுங்களேன் – விஜய் படமாக இருந்தா என்ன.? நான் நடிக்க மாட்டேன்… அடம்பிடித்த மைக் மோகன்…

அனைவரும் சமமாக அமர்ந்து தரமான உணவுகளை சாப்பிட வேண்டும். யாரும் கிழே அமர்ந்து சாப்பிட கூடாது என பெரிய டைனிங் டேபிள்கள் அமைத்து அதில் தான் சாப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம். இதனை பார்த்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இப்படியெல்லாம் செய்தால், இதே போல மற்ற தமிழ் படத்திற்கும் கேட்க ஆரம்பித்து விடுவார்களே என புலம்பி வருகிறனராம்.

 

உண்மையில் இதனை பார்க்கும் போது, கேப்டன் விஜயகாந்த் ஞாபகம் தான் வருகிறது. அவர் தான் அனைவர்க்கும் நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும் . மேலும் வாழை இலையில் அனைவரும் சாப்பிட வேண்டும் என கூறி அதனை முதன் முறையாக செயல்படுத்தியும் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top