Connect with us
shar

Cinema News

விஜய், அஜித்தை ஓரங்கட்டி ரியல் ஸ்டாராக நிற்கும் ஷாரூக்கான்! ‘ஜவான்’ படத்தால் நிகழப்போகும் அதிசயம்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் படம் ஜவான். இந்தப் படம் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட இருக்கின்றது. படத்தில் ஷாருக்கான் உடன் சேர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகி பாபு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றார்கள்.

படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளிவந்த நிலையில் அது தமிழ் ரசிகர்களிடம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றுதான் கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பாடல் எடுபடவில்லை என்றுதான் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : ரஜினி கெத்துதான்!.. ஆனா விஜய் செம மாஸ்!.. களத்தில் இறங்கி கொளுத்திப்போட்ட ராமராஜன்!…

இந்த நிலையில் ஷாருக்கான் திடீரென ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம். அதுவும் தமிழ் ரசிகர்களிடம் இந்த படத்தை ஒரு நல்ல முறையில் கொண்டு செல்வதற்காக படத்தின் பிரமோஷனை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

அதற்காக அவரே நேரடியாக கலந்து கொண்டு ரசிகர்களை சந்திக்க இருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் ஜவான் படத்தின் பிரிவியூ சோவையும் சென்னையில் வெளியிட இருக்கிறாராம். அதிலும் சாருக்கான் கலந்து கொள்ளப் போகிறாராம்.

அதனால் அவர் கலந்து கொள்ளும் இந்த விழா களைகட்ட போகும் என கூறி வருகிறார்கள். ஏற்கனவே எந்த விழாவில் கலந்து கொண்டாலும் ஷாருக்கான் ஆட்டத்துடனையே தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அதே போல் தான் இந்த விழாவும் இருக்கும் என கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : மகனுக்காக தானே களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திக்கும் அந்த நாள்

இதற்கு மத்தியில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து எல்லா நடிகர்களும் தன் படங்களுக்காக பல பிரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் நம் நடிகர்கள் நடித்தால் போதும். தன் வேலை முடிந்து விட்டது என்று தான் யோசிக்கிறார்கள். இதில் விஜய் அஜித் ஒன்றும் விதிவிலக்கு இல்லை. 60 வயதை நெருங்கப் போகும் ஷாருக்கான் பாலிவுட்டின் கிங் காங் என்ற அந்த ஒரு கெத்தை தலையில் ஏற்றாமல் சக நடிகர்களைப் போல எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் படத்திற்காக இந்த அளவு மெனக்கிடுவதை பார்த்த ரசிகர்கள் மிகவும் வியப்படைந்து இருக்கிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top