லதா மங்கேஷ்கர் சிதை மீது எச்சில் துப்பினாரா ஷாருக்கான்.... சர்ச்சையை கிளப்பும் வீடியோ....!

பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என புகழ்பெற்றதோடு, பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் இவர் மூன்று முறை பெற்றுள்ளார். மேலும் தாதா சாகேப் பால்கே, பாரத ரத்னா விருது, பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 28 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி லதா உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பொதுவாக இஸ்லாமிய முறைப்படி இரு கரங்களையும் வேண்டி பிரார்த்தனை செய்து காற்றில் ஊதுவார். இதை தான் ஷாருக்கானும் செய்தார்.
ஆனால், அவர் லதாவின் சிதை அருகில் எச்சில் துப்பியதாக புதிய பிரச்சனை ஒன்று உருவாகியுள்ளது. இது குறித்து பலரும் ஷாருக்கானை இப்படித்தான் இறுதி சடங்கில் கலந்து கொள்வீர்களா?, இது என்ன கலாச்சாரம்? என கேள்வி எழுப்பியும் விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.
ஆனால் மற்றொரு தரப்பினர் ஷாருக்கான் எச்சில் துப்பவில்லை அவர் இஸ்லாம் மதப்படி துவா செய்து காற்றில் தான் ஊதினார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள். ஆனால் இந்த சர்ச்சை குறித்து இதுவரை ஷாருக்கான் வாய் திறக்கவில்லை.
மேலும் வீடியோவைப் பார்க்க-https://twitter.com/svaradarajan/status/1490377983110283264?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1490377983110283264|twgr^|twcon^s1_c10&ref_url=https://tamil.behindtalkies.com/shah-rukh-khan-offering-dua-for-lata-mangeshkar/