latest news

இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் ரேசிங் படம்: தெறிக்க விடும் பைக்கர் டிரைலர் வெளியீடு!

தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவ்ர் நடிகர் சர்வானந்த். இவ்ரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் பைக்கர். ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் திரைப்படமான இதில் முக்கிய வேடத்தில் இதுதாண்டா போலீஸ் போன்ற திரடி ஆக்சன் படங்களில் நடித்த டாக்டர் ராஜசேகர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் ரேசிங் படமான பைக்கர் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

இந்த டிரைலரின் ஆரம்பத்திலேயே, இந்திய பந்தய வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த திறமையாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா? என்று ஒரு வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் கேள்வி எழுப்புவதோடு காட்சிகள் அதிரடியாகத் தொடங்குகின்றன. இதில் ‘விக்கி’ என்ற கதாபாத்திரத்தில் ஒரு வெறித்தனமான மற்றும் பைக் ரேஸராக சர்வானந்த் மிரட்டியுள்ளார்.

டிரைலரில் வெறும் ரேசிங் காட்சிகள் மட்டுமின்றி,செண்டிமெண்டாக தந்தை – மகன் உறவும் முக்கிய பங்கை காட்டுகிறது. இதில் சர்வானந்துக்குத் தந்தையாகவும், மிகவும் கண்டிப்பான பயிற்சியாளராகவும் ராஜசேகர் நடித்துள்ளார். டிரைலரை பார்க்கையில் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது தெரிகிறது.

பைக்கரை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். ‘யுவி கிரியேஷன்ஸ்பேனரில் வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் ஆகியோர் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளனர். சர்வானந்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நாயர் நடித்துள்ளார். ரன் படத்தில் நடித்த பிரபல நடிகர் அத்துல் குல்கர்னி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பின்னணி இசை ரேசிங் காட்சிகளின் வேகத்தையும், அதிரடியையும் பார்ப்பவர்களை சீட்டின் நினியில் அமரவைப்பது நிச்சயம். வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

8 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

8 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

13 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

16 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

16 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

18 hours ago