Categories: Cinema News latest news

எங்க குடும்பத்துல அவங்கதான் ஹிட்லர்!.. அருண் விஜய், ஸ்ரீதேவி உடைத்த குடும்ப ரகசியம்!

Arunvijay: விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிசன் படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதற்காக கொடுத்த பேட்டியில் ஸ்ரீதேவி, விஜயகுமார், அருண்விஜய், கவிதா ஆகியோர் கலந்துகொண்டு பேசி இருப்பார்கள். அதில் தங்கள் குடும்பம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

எங்க குடும்பத்துக்கே ஸ்ரீதேவி தான் செல்லம். எல்லாருக்கும் அவரை பிடிக்கும். நாங்க அவளை ஸ்ரீபாப்பானு தான் கூப்பிடுவோம் என அருண்விஜய் குறிப்பிட்டார். விஜயகுமாரும் ஸ்ரீ ஈசியா எல்லாரையும் சமாளிச்சிடுவானு சொல்லி அவரை கலாய்த்தார். மூத்த மகள் கவிதா ரொம்பவே ஸ்ரிக்ட்.

Also Read

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு தூக்கி கொடுத்த பிரபலம்!… இப்படி தான் இந்த விஷயம் நடந்துச்சாம்!

அவங்க தான் ஹிட்லர். அப்பா, அம்மாவை கூட சமாளிச்சிடலாம். அக்காவை சமாளிக்கிறது கஷ்டம். அவங்க சொன்னா அப்படியே நாங்க பண்ணிடுவோம். எங்க அம்மா நான் ஸ்கூல் படிக்க போகும் போதே பெண்களுடன் பேசக்கூடாது. உன் ஜாதகத்தில் இருக்கு என ஒரு பிட்டை போட்டு வைத்தார். அதனால் எனக்கு நிறைய பெண் தோழிகள் இல்லை. அதனால் புரோபோசலும் பெரிதாக கிடையாது.

கல்யாணத்தில் நிறைய பெண் புகைப்படங்களை காட்டிய போது எனக்கே கடுப்பானது. அப்போ பாக்காதனு சொல்லி இப்போ பாருனா. நான் எங்க பார்க்கிறது என்றேன் எனவும் கூறினார் அருண்விஜய். எங்க அக்கா அனிதா படிக்கும் போது ஒருத்தர் என்னை வழியில் நின்று டிஸ்டர்ப் செய்வதாக சொல்லினார். நாங்களும் அவரை மிரட்ட கூட்டமாக போய் நின்று மாஸ் காட்டினோம். கடைசியில் அவரையே எங்க அக்கா காதலித்து கல்யாணம் செய்து எங்களுக்கே பல்ப் கொடுத்தார்.

இதையும் படிங்க: அஜித் சம்பளம் இத்தனை கோடியா? உருட்டுனாலும் நியாயம் வேணாமாப்பா! பொளுந்துவிட்ட புளூசட்டை மாறன்

வனிதா விஜயகுமார் குற்றச்சாட்டுக்களை கடந்து இவர்கள் குடும்பமாக கொடுத்து இருக்கும் பேட்டி இதுதான் என்பதால் மிகவும் வைரலாகி வருகிறது. அக்கா, அண்ணன், தங்கை என இவர்கள் பாண்ட்டிங் பார்க்கவே அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan