நல்ல வேளை கல்யாணம் பண்ணல! பப்லுவை பற்றி மனம் திறந்த முன்னாள் காதலி

by Rohini |
bablu
X

bablu

Prithviraj: 50 வயதில் 21 வயதுடைய மலேசிய பெண் ஒருவரை திடீரென திருமணம் செய்தார் நடிகர் பப்லு என்ற ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் வைரலானதும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த வயதில் இப்படி ஒரு கல்யாணம் தேவையா என்று அனைவரும் பப்லுவாகிய பிரித்திவிராஜை கேள்வியால் வறுத்தெடுத்தனர்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன பிரித்திவிராஜ் 21 வயதுடைய ஒரு மலேசிய பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். எங்கு போனாலும் இருவரும் ஒன்றாக போவது, இடம் பொருள் இல்லாமல் ரொமான்ஸை அள்ளி வீசுவது என முரட்டு சிங்கிள்களையே எரிச்சலடைய வைத்தார் பிரித்திவிராஜ்.

இதையும் படிங்க: தளபதிக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையாத மணிரத்னம… அவரே சொன்ன காரணம்..!

ஆனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை என தெரியவில்லை. திடீரென தன் காதலியாகிய ஷீத்தலை பிரிந்து விட்டேன் என திடீரென பப்லு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தா.ர் அதிலிருந்து அனைவரும் பிரித்விராஜையும் ஷீத்தலையும் கண்டபடி வசைப்பாடி வந்தனர். இருவரும் பிரிந்த பிறகு பிரித்திவிராஜ் மட்டுமே பேட்டிகளில் அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளை பற்றி கூறி வந்தார்.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி பிரித்திவிராஜ் இதுவரை கூறவில்லை. இருவருக்கும் செட் ஆகவில்லை என்பதை மட்டுமே கூறினார். இப்போது முதன் முறையாக ஷீத்தல் மீடியா முன்பு வந்து பப்லுவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறும் போது எங்களுக்குள் என்ன வேண்டும் என்றாலும் நடந்திருக்கலாம்.

இதையும் படிங்க: மீண்டும் மணிரத்னத்துடன் கை கோர்க்கும் கமல்!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!..

அது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என நினைத்து இருவருமே பிரிந்து விட்டோம் என கூறினார் ஷீத்தல். அது மட்டும் அல்லாமல் ஷீத்தலுக்கு அன்பளிப்பாக கொடுத்த அத்தனை பொருட்களையும் திரும்ப வரும்போது பிரித்விராஜிடமே ஒப்படைத்து விட்டாராம் ஷீத்தல். முதல் முதலில் ஷீத்தலுக்கு புரொபோஸ் செய்யும்போது மோதிரம் கொடுத்து புரபோஸ் செய்தாராம் பிரித்துவிராஜ்.

அதையும் அங்கேயே வைத்துவிட்டு வந்து விட்டாராம். மேலும் எங்களுக்குள் நல்ல வேளை திருமணம் நடக்கவில்லை. அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம். ஏனெனில் அது எங்கள் இரு வீட்டாரையும் பாதிக்கும். அதனால் அதை நினைத்து நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என ஷீத்தல் கூறினார். மேலும் உங்களுடைய வாழ்க்கையில் இன்னொரு நபர் யாரேனும் வந்துள்ளாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷீத்தல் ஒருத்தர வச்சு பட்டதே போதும் .இனிமேல் என் வாழ்க்கையில் இன்னொரு நபர் என்பதே கிடையாது என பதிலளித்திருக்கிறார் ஷீத்தல்.

இதையும் படிங்க: அஜித்துக்கு பிடிச்ச பழமொழி இதுதானாம்! அதான் மனுஷன் இப்படி இருக்காரு

Next Story