எதை அடக்காவிட்டாலும் அதை அடக்கமுடியாது! பரிதவிக்கும் ஷெரின்.. ப்ரேக் அப் ஆகியும் இன்னும் அந்த ஆசை விடல
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வரவேண்டியவர் நடிகை ஷெரின். தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் அறிமுகமானது ஒரு கன்னட திரைப்படத்தில் தான். அதன் பிறகு துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார்.
விசில் என்ற திரைப்படத்திலும் ஷெரின் நடித்திருக்கிறார். நடித்தது என்னமோ குறைந்த அளவு படங்களானாலும் மக்கள் மனதில் இன்று வரை ஷெரினுக்கு என்று தனி இடம் உள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை மீண்டும் கொள்ளை அடித்தார்.
முதல் படத்தில் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பதிவு செய்தார். துள்ளுவதோ இளமை விசில் போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஷெரின் அதன் பிறகு ஒரு சில படங்களில் துணை வேடங்களிலும் நடித்தார்.
அதன் பின் வாய்ப்புகள் குறைய குறைய ஐட்டம் பாடலுக்கு ஆட முன் வந்தார். இந்த நிலையில் தனது பிரேக்கப் குறித்தும் கல்யாண வாழ்க்கையை பற்றியும் நடிகை ஷெரின் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சக போட்டியாளரான தர்ஷன் உடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் நடிகை ஷெரின்.
அதைப்பற்றி கேட்கும் போது அந்த அனுபவங்களை எல்லாம் அந்த வீட்டிலேயே விட்டு விட்டேன் என்று கூறினார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததே தன்னுடைய பிரேக் அப் ஆல் தான் என்றும் கூறினார். எட்டு வருடங்களாக ஒருவரை காதலித்ததாகவும் அதன் பிறகு எட்டாவது வருடத்தில் இருவருக்கும் ஏதோ வித கருத்து வேறுபாடுகள் எழுந்ததனால் ஷெரினும் அவருடைய காதலரும் பிரிந்து விட்டார்களாம்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆரை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல நடிகர்..! அங்கதான் விஷயமே இருக்கு..!
அது மட்டும் இல்லாமல் சமீப காலமாக அவருக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாகவும் கூறினார். கல்யாணம் ஆகி செட்டில் ஆக வேண்டும் என்றும் சிங்கிளா இருக்கிறது போர் அடிக்கிறது என்றும் கூறினார்.