துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஷெரீன். இவர் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை.
இதற்கிடையில் உடல் எடை அதிகரித்து ஆண்ட்டி போல தோற்றம் அளித்த ஷெரீன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். இந்நிலையில் ஷெரீன் எப்போதோ நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யிடம் பேசிய வீடியோவை தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் டிரண்ட் செய்து வருகிறார்கள்.
அந்த வீடியோவில் விஜய்யிடம் பலர் கேள்வி கேட்கின்றனர். அதில் ஷெரீனும் ஒருவராக கேள்வி கேட்கிறார். அதன்படி அந்த வீடியோவில் விஜயிடம் முழுவதும் ஆங்கிலத்தில் பேசும் ஷெரின், “என்ன விஜய் குளுருதா நான் வேனா அங்க வரட்டா” என்று கொஞ்சமும் விவரம் இல்லாமல் கேட்டுள்ளார்.
மேலும் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்தும் கேட்கிறார். அதற்கு பதிலளித்த விஜய் ஒரு நடிகனாக சினிமாவில் உடலை பிட்டாக வைத்துக் கொள்வது அவசியம் என கூறுகிறார். அழகிய தமிழ் மகன் படம் வெளியான சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெரீன் கொஞ்சம் சிறுபிள்ளை தனமாக கேள்வி கேட்டாலும் விஜய் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் மிகவும் சகஜமாக பேசியுள்ளார். அதே போல் தான் ஒரு சீனியர் மற்றும் ஸ்டார் நடிகர் என்ற பந்தா இல்லாமல் ஷெரினின் கேள்விக்கு மிகவும் பொறுமையாக பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…