கமல் சார் கால் பண்ணார்!. நான் அழுதுட்டேன்!.. சிவ்ராஜ்குமார் உருக்கம்!..

Shiv Rajkumar: கன்னட நடிகராக இருந்தாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்தான் சிவராஜ்குமார். பள்ளி முதல் கல்லூரி வரை சென்னையில்தான் படித்தார். தமிழ் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் அவர். ரஜினி, கமல் படங்களை பார்த்து ரசித்து சினிமாவுக்கு வந்தவர் இவர். இவரின் அப்பா ராஜ்குமார் முதலில் சென்னையில்தான் தங்கியிருந்தார்.
ராஜ்குமார் கன்னடத்தில் பெரிய ஹீரோ ஆன பின்னரே இவரின் குடும்பம் கர்நாடகாவுக்கு குடி பெயர்ந்தது. ராஜ்குமாரின் இரு மகன்களுமே நடிகர்களாகிவிட்டார்கள். இதில், சிவ்ராஜ்குமாரின் தம்பி புனித் ராஜ்குமார் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்தார். பல அநாதை இல்லங்கள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைப்பது என நிறைய உதவிகளை செய்து வந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு ஜிம்மியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சிவ்ராஜ்குமாருக்கும் கர்நாடகாவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். ‘இந்த படத்தில் 2 காட்சிகள்தான் நடித்தேன். ஆனால், ரசிகர்கள் இவ்வளவு அன்பு காட்டுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. சிகரெட் குடித்துவிட்டு சாம்பலை கீழே தட்டினேன் அவ்வளவுதான். அது ரஜினி சார் படம் என்பதால் மட்டுமே இது நடந்திருக்கிறது. பல வெளிநாடுகளில் இருந்தெல்லாம் நண்பர்கள் போன் செய்து ‘கலக்கிட்’ட என்றார்கள். நான் அப்படி அந்த படத்தில் ஒன்றும் செய்யவில்லை. இப்போது ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.
மேலும், நான் கமல் சாரின் தீவிர ரசிகர். அவரின் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். கமல் என்றாலே அழகு. நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன். இதை அவரிடமே நான் சொல்லியிருக்கிறேன். முதன்முறை அவர் என் வீட்டுக்கு வந்தபோது அவரையே பார்த்துகொண்டிருந்தேன். என்னை அப்பா அவரிடம் அறிமுகம் செய்து வைத்தபோது ‘உங்களை ஒருமுறை கட்டிபிடித்துக்கொள்ளட்டுமா?’ எனக்கேட்டேன்.
அவரும் என்னை கட்டியணைத்தார். 3 நாட்கள் நான் குளிக்கவே இல்லை. அவரின் வாசம் என் உடம்பிலே இருக்கவெண்டுமென நினைத்தேன். நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற சமயம் என்னை தொடர்பு கொண்டு பேசிய முதல் ஆள் அவர்தான். என் உடல் பற்றி அவர் விசாரித்த போது நான் அழுதேவிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.