ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி செய்த வேலை!.. ஆடிப்போன கன்னட சூப்பர்ஸ்டார்!...

jailer
ரஜினி மிகவும் எளிமையானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததால் அவர் எப்போதும் வசதிகளை விரும்புவதில்லை. அவர் வாழ்வில் அனுபவிக்கும் பல விஷயங்களில் அவருக்கே உடன்பாடு கிடையாது என ரஜினிக்கு நெருக்கமானவர்கள் எப்போதும் கூறுவார்கள். ஆனாலும், பல விஷயங்கள் அவரால் தவிர்க்க முடியவில்லை.

Rajinikanth
படப்பிடிப்பு தளத்திலும் ரஜினி மிகவும் எளிமையாக இருப்பார். பொதுவாக பெரிய நடிகர்களுக்கு தனியாக கேரவேன் கொடுத்துவிடுவார்கள். நடிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் நடிகர்கள் அதில்தான் இருப்பார்கள். ஷாட் ரெடி சார் என உதவியாளர் சென்று அழைத்தால் மட்டுமே கீழே இறங்கி வருவார்கள். சாப்பிடுவது, உடை மாற்றுவது, ஓய்வெடுப்பது என எல்லாமே கேரவேனில்தான் செய்வார்கள்.

rajini
ஆனால், ரஜினி அதற்கு நேர்மாறானவர். உடை மாற்றுவதற்கு மட்டுமே கேரவானை பயன்படுத்துவார். சில சமயம் அதையும் வெளியிலேயே கூட செய்துவிடுவார். எல்லோருடன் ஒன்றாக சாப்பிடுவார். சில சமயம் மட்டுமே கேரவானை பயன்படுத்துவார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு புத்தகம் படிப்பார் அல்லது லேப்டாப்பில் எதையாவது பார்த்து கொண்டிருப்பார். அல்லது தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளிம் பேசிக்கொண்டிருப்பார். இதுதான் அவரின் வழக்கம்.

shiv rajkumar
நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார் நடித்து வருகிறார். அவருக்கு என தனியாக ஒரு கேரவான் கொடுத்துள்ளனர். அவருக்கு வெயில் ஆகாது என்பதால் நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கேரவானில் ஓய்வெடுத்துவந்துள்ளார்.
ஆனால், ரஜினி அப்படி இல்லாமல் வெளியே அமர்ந்திருப்பதை பார்த்த அவர், நாம் மட்டும் இப்படி இருப்பது சரியில்லை என நினைத்து அவரும் வெளியே அமர்ந்துள்ளார். ஆனால், வெயில் தாங்காமல் உடல் சோர்வாகி அடிக்கடி குளுக்கோஸ் குடித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் மிகவும் சோர்வடைந்துள்ளார். இதை பார்த்த ரஜினி அவரிடம் சென்று உங்களுக்கு என்ன பிரச்சனை? என கேட்டார்.

shiv rajkuma
சிவ ராஜ்குமார் எல்லாவறையும் சொன்னதும் கோபமடைந்த ரஜினி ‘எனக்கு இதுவெல்லாம் செட் ஆகும். உங்கள் உடல்நிலைக்கு நீங்கள் கேரவானில்தான் இருக்க வேண்டும் எனக்கூறி அவரை ரஜினியே அழைத்து சென்று கேரவானில் விட்டாராம். மேலும், சிவராஜ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து அவர் கிளம்பும் வரை ரஜினியும் கேரவானிலேயே இருந்தாராம். ரஜினியின் செயலை சிவ ராஜ்குமார் பார்ப்பவர்கள் எல்லோருடம் வியந்து பேசி வருகிறாராம்.
இதையும் படிங்க: வைரமுத்துவா? இளையராஜாவா?… பாரதிராஜா சந்தித்த தர்மசங்கட நிலை…