More
Categories: Cinema News latest news

தனக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த பாக்யராஜை பழி தீர்த்த சிவாஜி

நடிகர் பாக்யராஜ் துவக்கத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அதன் பின் அவரும் டைரக்டரானார். நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தினார். இந்திய சினிமாவில் சிறந்த கதை ஆசிரியர் என்றால் அந்த பெருமை எப்போதும் பாக்யராஜூக்கு மட்டுமே உரியது.

வெற்றிப்படங்களை தந்தவர்

Advertising
Advertising

சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், எங்க சின்ன ராசா, ராசுக்குட்டி என அவர் இயக்கி நடித்த படங்கள், இன்றும் ரசிக்கிற படங்களாக இருக்கின்றன. ஒரு கட்டத்துக்கு பிறகு இயக்குவதை நிறுத்திக்கொண்ட பாக்யராஜ் இப்போதும் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Sivaji

ராணுவ அதிகாரி கேரக்டரில் சிவாஜி

ஒரு சினிமா நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது,
நான் டைரக்ட் செய்த தாவணிக்கனவுகள் படத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக சிவாஜி நடித்திருந்தார். அவர் என்னை பாக்கி என்றுதான் அழைப்பார். ஒரு நாள் சிவாஜி நடிக்க வேண்டிய காட்சிக்காக 7 மணிக்கு வரச் சொல்லி இருந்தேன். அவர் வருவதற்கு முன்,சில விநாடிகள் வரக்கூடிய ஒரு காட்சியை எடுக்க ஷாட் வைத்தேன். அப்போது சிவாஜி வந்துவிட்டார். வந்தவுடன், இப்போது எனக்குத்தானே ஷாட், அப்புறம் எதற்கு வேறு எதையோ எடுத்துக்கொண்டு இருக்கிறாய் என என்னிடம் கேட்டார். அதற்கு நான், இது ஒரு சின்ன ஷாட்தான் அண்ணே நீங்க வர இன்னும் சில நிமிடங்கள் இருந்ததால் அதற்குள் எடுத்துவிடலாம் என நினைத்துதான் ஷாட் வைத்தேன் என்றேன்.

எனக்கு கெட்ட பேரு வாங்கித் தர்றியா

அதற்கு அவர், சுத்தியும் 2 ஆயிரம் பேர் ஷூட்டிங் நடப்பதை பார்த்துகிட்டு இருக்காங்க, அவங்க எல்லாம் பாக்யராஜ் சரியான நேரத்துல ஷூட்டிங்கை ஆரம்பிச்சிட்டாரு, சிவாஜி தான் லேட்டா வந்தாருன்னு என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா, எனக்கு கெட்ட பேரு வாங்கி தர்றியா என கேட்டார். அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லண்ணே என கூறிவிட்டேன். அதற்கு பின் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை ஷூட் செய்தேன்.
அடுத்த நாள் 7.30 மணிக்கு அவருக்கு ஷாட் வைத்திருக்க முன்னதாக 7 மணிக்கே சிவாஜி வந்துவிட்டார். பக்கத்தில் சென்றிருந்த நான் அவர் வந்துவிட்ட தகவலை அறிந்து, அங்கு அரக்க பறக்க அங்கு ஓடி வந்தேன்.

Bhagyaraj

உன்னை பழிவாங்கிட்டேன்

பேப்பர் படித்துக்கொண்டிருந்த சிவாஜியிடம் அண்ணே, உங்களுக்கு 7.30 மணிக்குதான் ஷாட், அதுக்குள்ளே இப்பவே வந்துட்டீங்களே? என்றேன். அதற்கு அவர் நேத்து எனக்கு முன்னாடி ஷாட் எடுத்து எனக்கு கெட்ட பெயர் வாங்கி தந்த உன்னை பழிவாங்க தான் இன்னைக்கு முன்னாடியே வந்து உன்னை பழிவாங்கிட்டேன். இன்னைக்கு பார்க்கறவங்க சிவாஜி கரெக்ட் டைமுக்கு வந்துட்டாரு, பாக்யராஜ்தான் லேட் பண்ணிட்டாருன்னு சொல்வாங்க என்று சிவாஜி கூறியதாக, பாக்யராஜ் நகைச்சுவையாக பேசும்போது குறிப்பிட்டார்.

Published by
elango

Recent Posts