தமிழ் சினிமாவின் ஆளுமைகளில் முதன்மையானவர் தியாகராய பாகவதர். இவர் காலகட்டத்தில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். திரையில் இவரின் திரைப்படங்கள் திரையிடப்படும் பொழுது திரையரங்குகளில் திருவிழாக்கள் தான். அன்றைய காலத்து இளைஞர்கள் திரையரங்குக்கு வரும் பொழுது பாகவதர் போன்றே முடி திருத்தம் செய்து வருவார்கள் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மக்களிடமும் முத்திரை பதித்தார்.
இவருக்கு அடுத்து இருந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர்கள். இருவருமே நாடக த் துறையில் இருந்து சினிமாவிற்கு பயணித்தவர்கள் தான். இதில் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழ்நாட்டையும் ஆண்ட சொந்தக்காரர் ஆவார். சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆருக்கு சினிமா துறையில் கடும் போட்டியாளராக விளங்கினார். இருவருக்குமே தனித்தனியான பாதைகளில் பயணித்து வெற்றி கண்டவர்கள். இருப்பினும் இருவர்களது ஆரம்ப வாழ்க்கை சற்று கடினமாகவே அமைந்துள்ளது.
நாடகத்துறையில் இருந்த பொழுதே எம்ஜிஆர் சிவாஜியும் ஆழ்ந்த நட்புறவை கொண்டிருந்தனர். ஆரம்ப காலங்களில் சிவாஜிக்கு எம்ஜிஆரை விட நாடகங்களின் நடிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. அப்பொழுது எம்ஜிஆர் நிறைய நாடகங்களில் நடித்து நல்ல சம்பாதித்தார். சிவாஜி வறுமையுடன் இருக்கும் பொழுது எம்ஜிஆர் தினமும் அவருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் சிவாஜிக்கு பராசக்தி திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து சிவாஜிக்கு ஒரே நேரத்தில் 10 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ஆனால் எம்ஜிஆருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். எம்ஜிஆரின் நிலையை அறிந்த சிவாஜி தனக்கு வந்த மலைக்கள்ளன் திரைப்பட வாய்ப்பை அதன் தயாரிப்பாளரிடம் பேசி எம்.ஜி.ஆருக்கு வழங்கி உள்ளார். பின்னர் எம்ஜிஆர் அந்த படத்தில் நடித்தார் படம் மாபெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது அத்திரைப்படம். பின்னர் சிவாஜியுடன் கூண்டுக்கிளி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தவுடன் அவருடன் நடிக்க ”வெறும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் போதும் தம்பி சிவாஜியுடன் நடிப்பதே எனக்கு பெருமை ”என்று கூறினார்.
தொழில்முறை போட்டியை தவிர வேறு எந்த பகையும் இருவர் இடையில் இருந்தது இல்லை. மேலும் எம்ஜிஆர் சிவாஜி வீட்டிற்கு அடிக்கடி சென்று மீன் குழம்பு சாப்பிடுவதை சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது முதலமைச்சர் ஆன பின்பும் தொடர்ந்து இருக்கிறது. அவர்களின் அண்ணன் தம்பி பாசமும் காலத்துக்கும் நிலைத்து நின்றது.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…