கதை கேட்கும் போது தூங்கிருவேன்...அஸ்வின் செஞ்சா தப்பு...சிவாஜி பண்ணா கரெக்டா...? வெடிக்கும் விவாதம்...!
சில மாதங்களுக்கு முன் ஒரு பெரிய சர்ச்சையாக பேசப்பட்ட செய்தி நடிகர் அஸ்வின் சொன்ன ஒரு தகவல். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியில் அவருக்கும் பாடகி சிவாங்கிக்கும் இடையில் நடக்கும் சில உரசல்கள் பார்ப்பவர் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.
அதன் மூலமாகவே அஸ்வின் பரவலாக பேசப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் பெரிய பிரபலங்கள் கூடிய ஒரு விழா மேடையில் அஸ்வின் இயக்குனர்கள் கதை கேட்கும் போது நான் தூங்கிருவேன் என்று அசால்ட்டாக அவரே அறியாமல் சொன்ன விஷயம் பூதாகரமாக மாறியது. பெரிய சர்ச்சை பொருளாகவும் பேசப்பட்டது.
இதையும் படிங்கள் : அருவா இயக்குனரை ஆப் செய்த சிவகார்த்திகேயன்….எல்லாம் யானை செஞ்ச வேலை…
இப்ப வந்த ஒருவன் இப்படியெல்லாம் பேசுகிறானே என்று சகட்டுமானைக்கு திட்டி தீர்த்தனர். அதே வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றியும் ஒரு செய்தி இப்போது வைரலாகி வருகின்றது. இந்த கேள்விக்கு தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தக்க விளக்கத்தைக் கொடுத்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றி சினிமாவை பொருத்தவரைக்கும் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. குறையும் கண்டுபிடிக்க முடியாது. அப்பேற்பட்ட மகாநடிகர். நடிக்கும் கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துபவர்.
ஒரு சமயம் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில இயக்குனர்கள் சிவாஜி கணேசன் கதை கேட்கும் முறையை பற்றி பேசியிருக்கின்றனர். அதாவது தூங்கும் போது கதை சொன்னால் கூட அதை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டு 3 மணி நேரம் கழித்து சூட்டிங் ஆனாலும் எந்த ஒரு பிசிறும் இன்றி அப்படியே நடிப்பார் சிவாஜி கணேசன் என்று கூறியிருக்கின்றார். இதையும் நடிகர் அஸ்வின் சொன்னதையும் ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு ஒரு விவாதமாகவே இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.