75 லட்சத்திலிருந்து 5 லட்சமாக சம்பளத்தை குறைத்த பிரபு.. சிவாஜி சும்மா இருப்பாரா? பதறி ஓடிய சம்பவம்

Published on: April 22, 2024
sivaij
---Advertisement---

Actor Prabhu: தமிழ் சினிமாவில் கன்னக்குழி நடிகர் என்று அறியப்படுபவர் நடிகர் பிரபு. நடிகர் திலகம் வாரிசு என்றாலும் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடித்த பல திரைப்படங்கள் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள். சின்னத்தம்பி, பரம்பரை, குரு சிஷ்யன், அக்னி நட்சத்திரம், வெற்றிவிழா போன்ற படங்கள் பிரபுவின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படங்கள்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இன்றைய வாரிசு நடிகர்கள் பெரும்பாலும் தன் தந்தை புகழை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். உதாரணமாக கௌதம் கார்த்திக், சாந்தனு போன்ற நடிகர்களை குறிப்பிடலாம். ஆனால் சிவாஜி என்பது ஒரு பெரிய சாம்ராஜ்யம். அவருடைய வாரிசு என்பதை சரியாக நிரூபித்தவர் பிரபு.

இதையும் படிங்க: கலங்கி நின்ன இயக்குனர்!.. கை கொடுத்த கமல்!.. அவர் இல்லன்னா ரஜினிக்கு ஒரு கிளாசிக் படமே இல்ல!..

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பிரபு வெற்றிவாகையையே சூடி வந்தார். இதற்கிடையில் எல்லாருக்கும் வருகிற காதல் பிரபுவுக்கும் வந்திருக்கிறது. பிரபுவும் குஷ்பூவும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் பிரபு எந்தளவுக்கு பாதிக்கப்பட்டார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

பிரபல மூத்த பத்திரிக்கையாளரான சபிதா பிரபுவின் காதலை பற்றி சில விஷயங்கள் கூறியிருக்கிறார். அதாவது இருவரும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த விஷயம் தெரிந்து சிவாஜி தான் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பிரபுவை சுட நினைத்தார் என்றும் அதற்கு பயந்து பிரபு பதறியடித்து ஓடினார் என்றும் சபிதா கூறினார்.

இதையும் படிங்க; நீ சொன்ன கதை நல்லாவே இல்ல… லோகேஷின் முகத்தில் அடித்த போல சொன்ன ரஜினிகாந்த்… இது வேறயா!…

இந்த சம்பவத்தால்தான் பிரபுவின் மார்கெட் குறைந்தது என்றும் சபிதா கூறினார். அந்த நேரத்தில் பிரபு மாறன் என்ற படத்தில் நடித்து வந்தாராம். அந்தப் படத்திற்காக 75 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பிரபு காதல் விஷயத்தால் மார்கெட் குறைந்ததால் தன்னுடைய சம்பளத்தை 5 லட்சமாக குறைத்துக் கொண்டதாகவும் சபிதா கூறினார். மேலும் வாய்ப்புக்காக பல பேரை அணுகியிருக்கிறார் என்றும் சபிதா கூறினார்.

ஆனால் சிவாஜியின் இந்த செய்கையால் குஷ்பூவின் மேல் ரசிகர்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் குஷ்பூவின் கெரியரில் எந்த மாற்றமும் இல்லையாம். அவருக்கு எப்போதும் போல் ஏறுமுகமாகத்தான் இருந்திருக்கிறது. பிரபுவுக்குத்தான் இறங்குமுகம் என்று சபிதா கூறினார்.

இதையும் படிங்க: பாரதிராஜா இயக்கத்தில் நடிக்காத 3 ஜாம்பவான்கள்!.. இது எப்படி மிஸ் ஆச்சி தெரியலயே!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.