தாங்க முடியாத அட்டகாசம்...! அடுத்தவன் காசுல சகலமும் அனுபவிக்கும் சிவாங்கி..!

by Rohini |
shiv_main_cine
X

விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் பாடகி மற்றும் நடிகை சிவாங்கி. தன்னுடைய செல்லமான குரலால் அனைவரையும் ஈர்த்து மேலும் பிரபலமானார். சூப்பர் சிங்கரில் வெற்றியை எட்ட முடியவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

shiv1_cine

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன்களில் கோமாளியாகவே வந்து மக்களை ரசிக்க வைத்தார். இந்த பெருமையால் வெள்ளித்திரையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்கள் : அஜித்தை நம்பி இன்னும் பிரயோஜனம் இல்லை…! எச்.வினோத் எடுத்த திடீர் முடிவு…

shiv2_cine

முழு நேர நடிகையாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து தன் நடிப்பை வெளிப்படுத்தினார். அது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் பாடவும் செய்திருக்கிறார். மேலும் வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

shiv3_cine

இந்த நிலையில் வெளி நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பொதுவாகவே பிரபலங்களுடன் ஒரு நபர் வரலாம் என்ற அனுமதி மட்டுமே இருக்கிறது. அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அம்மணியோ என்னுடன் அம்மா, அப்பா, தம்பி அனைவரும் வருவார்கள். இதற்கு சம்மதம் என்றால் நான் வருகிறேன். இல்லையென்றால் முடியாது என கூற சிவாங்கி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருதி அந்த கமிட்டி சம்மதம் தெரிவித்து குடும்பத்திற்கே செலவு செய்து வருகிறதாம்.

Next Story