சினிமாவில் சிவாங்கி பாடியுள்ள பாடல்.. இதுவும் இந்த நடிகருடன் இணைந்து.!
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகமானவர் சிவாங்கி. இவரது தாய் மற்றும் தந்தை இருவருமே கர்நாடக இசை பாடகர்கள். சினிமாவிலும் பல பாடல்களை பாடியுள்ளார்கள். அதுமட்டுமின்றி இருவருமே தமிழக அரசிடமிருந்து கலைமாமணி விருது வென்றவர்கள்.
இசை குடும்பத்தை பின்புலமாகக் கொண்ட இவரும் இசையிலிருந்தே தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஸ்வின் மீது கிரஷ் கொண்டவர் போல செய்துவரும் அட்ராசிட்டிகளால் ரசிகர்களை கவர்ந்தார்.
பவானி ரெட்டி 2வது திருமணம் செய்தது உண்மையா?….சகோதரி விளக்கம்..
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவரை சுட்டிக்குழந்தை என வர்ணித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடும் அளவிற்கு உயர்ந்தார். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்பாகவே சினிமாவில் பாடல்களையும் பாடியுள்ளார்.
கடந்த 2009ல் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தில் இடம்பெற்ற 'அன்பாலே அழகாகும் வீடு' என்ற பாடல்தான் இவர் பாடிய முதல் பாடல். இதையடுத்து தரேன் குமார் இசையில் வெளியான 'அஸ்க் மாரோ' என்ற ஆல்பம் சாங்கை பாடினார்.
இதையடுத்து சமீபத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் நடிப்பில் வெளியான அடிபொலி என்ற ஆல்பம் சாங்கையும் பாடினார் சிவிங்கி. இவ்விரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியல் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது சினிமாவில் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.
சிவகார்த்திகேனை மேலும் கடனாளி ஆக்கிய டாக்டர்.. அதுவும் இத்தனை கோடியா?…….
ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன் என்பவர் நாயகனாக அறிமுகமாகும் படம் மாயன். பிந்து மாதவி நாயகியாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஸ் ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை சிம்புவுடன் இணைந்து பாடியுள்ளார் சிவாங்கி.