இந்த புஷ்பா தொப்புள காட்டி டேன்ஸ் ஆடும்!.. ஷிவானி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ....
தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் பற்றிய வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனாக உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியானது. எனவே, இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் பேன் இண்டியா ஹீரோவாக மாறியுள்ளார். இப்படம் ரூ.350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது. நடிகை சமந்தா நடனம் ஆடிய‘ஓ சொல்றியா’ பாடல் இளசுகளை சுண்டி இழுத்தது.
அதோடு, சித் ஸ்ரீராம் பாடிய ஸ்ரீவள்ளி பாடலில் நடந்து கொண்டே அல்லு அர்ஜூன் போடும் ஒரு ஸ்டெப்ஸ் பலரையும் கவர, பிரபலங்கள் முதல் பலரும் அதை டப்ஸ்மாஸ் செய்து வீடியோ வெளியிட்டனர்.
இதையும் படிங்க: என்னமா டபுள் டபுளா தெரியுது..? சின்னத்திரை நயனின் க்ளிக்ஸ்..!
இந்நிலையில், இந்த பாடலுக்கு கவர்ச்சி குயின் ஷிவானி நாராயணன் நடனம் ஆடி வீடிஓ வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது தொப்புள் காட்டி ஆடும் புஷ்பா என கிண்டலடித்து வருகின்றனர்.