கடைசியில வடிவேலுவுக்கு ஜோடியா?... ஷிவானி நிலமை இப்படி ஆகிப்போச்சே...
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டு சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளர். சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஏராளமான வெள்ளைக்கார நடிகைகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இன்ஸ்டாகிராம் குயின் ஷிவானி நாராயணன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இந்த தகவலை ஷிவானி நாராயணன் தெரிவித்துள்ளார். லெஜண்ட் நடிகருடன் நடிப்பது மகிழ்ச்சி என அம்மணி உருகியுள்ளார்.
இந்த படத்தில் அவர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் எனவும், ஜோடி இல்லை வேறு ஒரு முக்கிய வேடம் எனவும் செய்திகள் கசிந்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பின் கமல் நடிக்கும் விக்ரம் படத்திலும், பொன்ராம் - விஜய் சேதுபதி இணைந்துள்ள புதிய படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், தற்போது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.