க்யூட்டி தலைவி!.. ஷிவ்வு செல்லம்!.. ஷிவானியின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்!..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.
ஆந்திராவை சேர்ந்த இவர் அங்கு திறமையை காட்டாமல் தமிழ்நாட்டுக்கு வந்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நுழைந்தார்.
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும். ஏனெனில், வாளிப்பான உடம்பை விதவிதமாக காண்பித்து ரசிகர்களை வளைத்தார்.
பிக்பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்துவிட்டு வெளியேறினார். அந்த வீட்டிலிருந்த போது ரசிகர்கள் கவரும்படி ஷிவானி எதுவுமே செய்யவில்லை.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேவந்த பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். அவர் எதிபார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.
சினிமாவில் நடிப்பது தொடர்பாக இவரை யாரேனும் தொடர்பு கொண்டால் போனையே எடுக்கமாட்டார் என்கிற புகாரும் இவர் மேல் இருக்கிறது.
இந்நிலையில், ஷிவானி நாராயணனின் கேஸ்வல் லுக் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘க்யூட்டி தலைவி!.. ஷிவ்வு செல்லம்’ என்றெல்லாம் அவரை கொஞ்சி வருகின்றனர்.