Shivani narayanan: ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் கோலிவுட்டில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் ஷிவானி நாராயணன். எனவே, அம்மாவுடன் சென்னை வந்து தங்கி வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் வெறுத்துபோய் சின்னத்திரை பக்கம் சென்றார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களையும், சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாகியிருந்தார். ஒருகட்டத்தில் தினமும் மாலை 4 மணிக்கு இவரின் புகைப்படங்கள் வெளியாகும். இதற்காக நெட்டிசன்கள் தவம் கிடந்தார்கள்.

சின்னத்திரையில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க ரெட்டை ரோஜா, பகல் நிலவு என சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனாலும் சீரியலை விட தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம்தான் ஷிவானி ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வாய்ப்பு வர நாம்தான் அடுத்த ஓவியா என உள்ளோ போனவர் புஸ்வானமாகி போனார். பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்ததை தவிர அங்கு வேறு ஒன்றையும் அவர் கிழிக்கவில்லை. 98 நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ரசிகர்களை கவரவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அது பெரிய வாய்ப்பாக அமையவில்லை. எனவே, மீண்டும் சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

அந்த வகையில் அரை டவுசரும், டீசர்ட்டும் அணிந்து அழகை காட்டி ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com





