மொத்த அழகையும் வச்சி படைச்சானா பிரம்மன்!... சுண்டி இழுக்கும் ஷிவானி...
ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.
சீரியலில் நடித்து பிரபலமானதை விடதினமும் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது உடல் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இவர் பகிரும் புகைப்படங்களுக்காகவே ரசிகர்கள் தவம் கிடக்க துவங்கினர்.
இதனால், கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும்படி பெரிதாக எதையும் அவர் செய்யவில்லை. ஆனாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பாவாடை தாவணியில் அழகாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.