மாலத்தீவிலிருந்து தம்மாத்தூண்டு கவர்ச்சி காட்டிய ஷிவானி.. அழகு அள்ளுது!

by ராம் சுதன் |
shivani narayanan
X

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். அதன்பின் ‘ரெட்டை ரோஜா’ என்கிற சீரியல் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். பின்னர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் உடன் இவர் கடலை போட்டு வந்தார். அவரை காதலித்ததாகவும் அப்போது நிறைய கிசுகிசு வந்தது. பாலாஜியுடன் நெருக்கம் காட்டிவந்த ஷிவானியை பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்தே அவரது அம்மா திட்டினார்.

shivani narayanan

shivani narayanan

அதன்பின் பிக்பாஸ் வீட்டில் பாலாஜியிடம் சற்று இடைவெளியை கடைபிடித்தவர், வெளியே வந்த பின் அடிக்கடி அவருடன் போட்டோ எடுப்பது மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியாக ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை உசுப்பேத்தி வந்தார். அப்படி அவர் தொடர்ச்சியாக போட்டோ போட்டதன் விளைவு, கமல்ஹாசன், விஜய்சேதுபதி நடிக்கும் 'விக்ரம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: யாரோ வீசிய வலையில் சிக்கிய அமலா பால் – முழுசா பார்க்க முடியலன்னு கதறுறாங்க!

இப்படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படம் மட்டுமல்லாமல் மேலும் சில பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சினிமாவில் நடிக்க சென்றாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோவை வெளியிடுவதை இவர் நிறுத்தவில்லை.

shivani narayanan

shivani narayanan

இந்நிலையில், தற்போது மாலத்தீவில் எடுத்த தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த படத்தில் மஞ்சள் நிற உடையில் மிகவும் அழகாக உள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்துவருகின்றனர்.

Next Story