நான் இப்படியும் போஸ் கொடுப்பேன்! - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷிவானி...
சில டிவி சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற சீரியலில் நடித்தார். அதன்பின் ‘ரெட்டை ரோஜா’ என்கிற சீரியல் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார்.
ஆனால், அதைவிடவும், பளிச்சென்ற அழகில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் நெட்டிசன்களை திரும்பி பார்க்க வைத்தது. தினமும் மாலை 4 மணி ஆனால், இவரின் புகைப்படம் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியாகும். ஒருகட்டத்தில் அவருக்கென்றே ரசிகர்களும் உருவாகினர்.
அதன் மூலம் கிடைத்த புகழால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடாமல் அழகு பொம்மையாகவே வலம் வந்தார். பிக்பாஸ் வீட்டில் அவருடன் இருந்த பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி அழுது வடிந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து திரும்பிய பின் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்கும் வேலையில் இறங்கிவிட்டார். அரைகுறை உடையில் தொடையை காட்டி நெட்டிசன்களை சூடாக்கி வந்த ஷிவானி சமீபகாலமாக, புடவை, தாவணி பாவாடை உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.சமீபத்தில் கூட பச்சை நிற புடவையில் அவர் கொடுத்த போஸ் பலரையும் கவர்ந்தது.
இந்நிலையில், பச்சை நிற பாவாடை தாவணியில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், சிலரோ வழக்கமாக பளிச் கவர்ச்சியில் போடுற நீ இப்படி தாவணி பாவடையில ஏமாத்திட்டியே என செல்லமாக அவரிடம் கோபித்து வருகின்றனர்.