உன்ன இப்படி பாப்போம்னு எதிர்பாக்கல!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷிவானி...
மாடலிங், நடிப்பு, நடனம் ஆகியற்றில் ஆர்வம் உள்ளவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். பின்னார் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார்.
ஆனால், சின்னத்திர நடிகை என்பதை விட தினமும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன் காரணமாகவே இவரின் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர்.
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். கமல் ரெக்கமண்ட் செய்தாரோ என்னவோ அவர் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து வந்தவர் ஷிவானி திடீரென போலீஸ் அதிகாரி போல் உடை அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது சீரியலுக்கா இல்லை விக்ரம் படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.