க்ளோசப்ல படு ஹாட்டா இருக்கு!... இப்படி போஸ் கொடுக்கணுமா ஷிவானி?....
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சிரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அம்மணிக்கு சொந்த தேசம் ஆந்திரா என்றாலும் வசிப்பது என்னவோ சென்னைதான். சீரியலில் நடிக்கும் போது புடவை கட்டி இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படமெல்லாம் வேற லெவல் ஹாட்.
அதிலும், பளபள இடுப்பை காட்டி இவர் கொடுக்கும் போஸ் எல்லாம் வேற லெவலில் இருக்கும். அப்படி புகைப்படங்களை பகிர்ந்தே நெட்டிசன்களை தன் பக்கம் இழுத்து இன்ஸ்டாகிராமிலும்,டிவிட்டரிலும் ஃபாலோயர்ஸை அதிகப்படுத்தினார். இதன் காரணமாகவே அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால், காலையில் பிக்பாஸ் போடும் பாடலுக்கு நடனமாடியதை தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை. அவ்வப்போது பயில்வான் பாலுவுடன் ரொமான்ஸ் செய்ததை தவிர உருப்படியாக எதையும் செய்யாமல் வெறும் கவர்ச்சி பொம்மையாகவே வலம் வந்தார்.
ஆனாலும், கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தினமும் கிளுகிளுப்பான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், குட்டியான ஜீன்ஸ் டவுசரை போட்டு தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில், அவரின் கவர்ச்சியான தொடையை பார்த்த நெட்டிசன்கள் ‘இப்படி க்ளோசப்ல காட்டாதம்மா’ என பதிவிட்டு வருகின்றனர்.