பிங்க் ட்ரெஸ் கொஞ்சம் சுமார் தான், கருப்பு தான் செல்லம் உனக்கு டாப்பு.. நடிகையிடம் வம்பிலுகும் ரசிகர்கள்....

சிவானி நாராயணன் தமிழ் பிக் பாஸ் சீஸன் 4 கில் கலந்து கொண்ட நடிகைகளில் இளமையும் கவர்ச்சியும் நிறைந்தவர்.
டிவி தொடர்கள் மூலம் இளம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகை சிவாணி, பிக் பாஸ் சீஸன் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டார்.
பிக் பாஸ் தொடர் முழுவதும் குட்டி குட்டி உடை அணிந்து ரசிகர்களை சூடகியவர், சக போட்டியாளரான பாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு மேலும் பிரபலமானார்.
பிக் பாஸ் தொடர் முடிந்து வெளியே வந்த உடன், தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் சூடான கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் பலனாக கமல் நடிக்கும் "விக்ரம்" மற்றும் வடிவேலுவின் "நாய் சேகர் ரிடர்ன்ஸ்" படங்களில் நடித்து வருகிறார்.
சிவானி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆன்லைன் நிறுவனம் ஒன்றை விளம்பரப்படுத்த, ஆடை மாற்றி வெளியிட்ட விடியோவில், சிவானி கருப்பு உடையில் டாப்பக இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.