பீஸு இல்லாத பிரியாணி வேண்டாம்!.. பழைய பன்னீர்செல்வமாக மாறி வரும் ஷிவானி நாராயணன்!..

ஷிவானி நாராயணன் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பிரபலமானார்.
ஷிவானி 2015ல் விளம்பரங்களில் நடித்து மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2016ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி (பகுதி 3) தொடரில் 'காயத்ரி' என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார்.

2017ம் ஆண்டு பகல் நிலவு சீரியலில் 'சினேகா' என்ற கதாநாயகி வேடத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் அஸீம் நடித்தார். 2019ம் ஆண்டு கடைக்குட்டி சிங்கம் எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார். இரட்டை ரோஜா (2020): ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்தத் தொடரில் 'அபி' மற்றும் 'அனு' என்ற இரட்டை வேடங்களில் 168 எபிசோடுகள் நடித்து விருதுகளையும் குவித்தார்.

2020ம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விஜய் சேதுபதியுடன் மீண்டும் டிஎஸ்பி படத்தில் இணைந்தார். ஆர்ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடினார். கடைசியாக 2023ல் இயக்குநர் செல்வகுமார் இயக்கிய பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

ஷிவானி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல லட்சம் ரசிகர்களை ஈர்த்துள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தனர். கடந்த 2 வருடங்களாக புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது புதிய திரைப்பட வாய்ப்புகளைத் தேடி வருகிறார். இருப்பினும், சமீபத்தில் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காததால், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

2024 இல் அவரது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக வதந்திகள் பரவின, இதனால் அவரது தோற்றம் மாறியதாக சிலர் விமர்சித்தனர். அதெல்லாம் இல்லை என்றும் உடல் எடையை குறைத்ததன் விளைவு தான் என்றும் கூறினார். உடல் எடையை குறைத்த நிலையில், தான் ஷிவானிக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வரும் நிலையில், மீண்டும் கொஞ்சம் சதை போட்டு பழையபடி புசுபுசுவென ரசிகர்கள் கொஞ்சும் ஷிவானியாக மாறி வருகிறார்.