அம்மாவை தூக்கி சாப்பிடுவாங்க போல... அசத்தல் கவர்ச்சியில் வாரிசு நடிகை.....

80களில் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் டாக்டர் ராஜசேகர். இவர் நடித்த இதுதான்டா போலீஸ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. அதன்பின் ராஜசேகரின் பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடித்தது. இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் சிவத்மிகா, மற்றொருவர் ஷிவானி. இருவருமே நடிகை ஆகிவிட்டார்கள். மேலும், இன்ஸ்டாகிராமில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
இதில் ஷிவானி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் இதுவரை 75 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.சிறு வயது முதலே நடிப்பு, மாடலிங், இசை, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தற்போது அப்பாவுடன் இணைந்து சேகர் என்கிற படத்திலும் நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் கதாநாயகியாக் நடித்திருந்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.