Categories: Cinema News latest news

ஜெய்லர் கொடுத்த வாழ்க்கை… சிவராஜ்குமாரின் புதிய அவதாரம்… கல்லா கட்ட ரெடி!

ரஜினிகாந்த் ஜெய்லர் படத்தின் வெற்றிக்கு பின்னர் பலரின் சினிமா வாழ்க்கையே அடியேடு மாறி இருக்கிறது. அதிலும் நல்லபடியான மாற்றம் தான் இது. அதுகுறித்த ஆச்சரிய சம்பவங்கள் குறித்து தற்போது இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜெய்லர் படத்தில் மல்டி ஸ்டார் கூட்டணி களமிறங்கியது. பல ஹீரோக்கள் சின்ன வேடங்களில் நடித்து கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு தற்போது வாய்ப்புகளுடன் புகழும் அதிகரித்து இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமாருமே சேருவார்கள்.

Also Read

இதையும் படிங்க : மகனை களம் இறக்கி விஜயின் கோபத்திற்கு ஆளான லைக்கா!.. அட இது அவருக்கே தெரியாதாம்!…

சுனில், வில்லன் விநாயகன் என பலரும் புது அவதாரம் எடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு தொடர்ச்சியாக தமிழ் வாய்ப்பே அதிகரித்து வருகிறது. அதிலும் சிவராஜ்குமாருக்கு தமிழில் புது மார்க்கெட்டே பிறந்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை தான்.

கன்னடத்தில் மிகப்பெரிய ஸ்டாராக இருப்பவர் தான் சிவராஜ்குமார். கன்னட ஸ்டார் என்றாலும் சென்னையிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியில்தான் சினிமா பற்றிய படிப்பை படித்தார். பாலச்சந்தரின் அறிவுரைப்படி சென்னையிலேயே நடிப்புப் பயிற்சியும் மேற்கொண்டார். அதனால் அவருக்கு தமிழ் தெளிவாக பேசத்தெரியும். 

இதையும் படிங்க : தாத்தா வழியில் பேரன்… ஜேசன் எண்ட்ரிக்கு எஸ்.ஏ.சி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? பாசம் தான்!

ஜெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏன் தமிழில் நடிக்கவில்லை என பலர் கேட்கின்றனர். எனக்கு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் யாரும் கூப்பிடலயே. அதான் நடிக்கல என்றார். தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தால் தமிழில் நடிப்பது எனக்கு பெருமை எனவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் இவரின் மார்க்கெட் ஏற்றத்தால், அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் கோஸ்ட் படத்தினை தமிழில் டப் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்து இருக்கிறது. இந்த தமிழ் டப்பிங்கிற்கு தானே குரல் கொடுப்பேன். எனக்கு டப்பிங்கெல்லாம் வேண்டாம் என கறாராக சொல்லிவிட்டாராம். தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Published by
Akhilan