அந்த படத்துல கூட வாய்ப்பு கேட்டேன்!. ஆனா விஜய் கொடுக்கல!.. அதிரவைத்த ஷோபா சந்திரசேகர்..

Published on: November 8, 2023
viay
---Advertisement---

80களில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்தை வைத்து ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரின் ஒரே மகன் விஜய். சினிமாவில் நடிக்க ஆசைப்படவே அப்பாவிடம் அடம்பிடித்து சினிமாவுக்கு வந்தார். எஸ்.ஏ.சிக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் விஜய் அதில் உறுதியாக இருந்ததால் ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பின் பல படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி முன்னணி நடிகரகளில் ஒருவராக மாறிய விஜய் இப்போது ரஜினியுடன் போட்டி போடும் நடிகராக மாறியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குகிறார். அவரின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: விஜய் யூஸ் பண்ண கெட்டவார்த்தை எந்தளவுக்கு என்னை பாதிச்சது தெரியுமா? பாடகி கொடுத்த ஷாக்

ஒருபக்கம், அவரின் சொந்த வாழ்வில் பல மர்மங்களும் அடங்கியிருக்கிறது. பல வருங்களாக விஜய் நடிக்கும் படங்களின் கதையை கேட்டு அவரின் கால்ஷீட்டை கவனித்து வந்தவர் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஆனால், ஒரு கட்டத்தில் அவரை விஜய் கழட்டிவிட்டார். அப்பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை சந்திப்பதையே தவிர்த்து வந்தார்.

அதோடு, கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த விஜய் நீலாங்கரை பகுதியில் பங்களா கட்டி குடியேறினார். இப்போது அவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் அவருடன் இல்லை. அவர்கள் லண்டனில் வசித்து வருகிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் விஜய் பட விழாக்களில் அவரின் மனைவி சங்கீதா கலந்து கொள்வார். இப்போதெல்லாம் அவரை பார்க்க முடியவில்லை. குடும்பத்தை பிரிந்து விஜய் தனியே வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: சத்தமே இல்லாம சம்பவம் செய்த லியோ!.. பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த விஜய்!..

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் ‘விஜய் நடிக்கும் படங்களில் அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், விஜய் அந்த வாய்ப்பை கொடுப்பதே இல்லை. வாரிசு படத்தில் கூட நான் அம்மாவாக நடிக்கிறேன் என கேட்டேன். ‘உங்களை பார்த்தவுடனே நான் சிரித்துவிடுவேன்’ அப்புறம் எப்படி நடிப்பது?’ என சொல்லி வாய்ப்புகொடுக்கவில்லை.

விஜய் மிகவும் பாசமானவர்தான். சமீபத்தில் எங்களின் 50வது திருமண நாளை கொண்டாடினோம். அவருக்கு போன் செய்து ‘நீ கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும்’ என அழைத்தேன். அடுத்த 10வது நிமிடத்தில் என் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரைப்பற்றி தவறான தகவல்களை பலரும் பரப்பி வருகிறார்கள். அதில் உண்மையில்லை’ என அவர் பேசினார்.

இதையும் படிங்க: சங்கீதாவுக்கு பிடிக்காத விஷயத்தினை தொடர்ந்து செய்யும் விஜய்..! குடும்பத்தில் வெடித்த பிரளயம்..!

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.