தனுஷ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி செய்தி.. இணையத்தில் முன்னணி நிறுவனம் செய்த வேலையை பாருங்க...

by Manikandan |
தனுஷ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி செய்தி.. இணையத்தில் முன்னணி நிறுவனம் செய்த வேலையை பாருங்க...
X

சினிமா பிரபலங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அதிகாரபூர்வ கணக்கு என்பதற்காக ஆய்வு செய்து புளூடிக் வழங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தனுஷ் ட்விட்டர் பக்கத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே புளூடிக் கிடைத்தது .ட்விட்டரில் அதிகம் மக்கள் பின்பற்றும் கோலிவுட் நடிகர்களில் 10.7 மில்லியன் என்ற எண்ணிக்கை வைத்திருக்கும் ஒரே நடிகர் தனுஷ் தான்.

இந்த நிலையில், தனுஷிற்கு கொடுத்திருந்தார் ப்ளூ நிற டிக்கை சட்டென ட்வீட்டர் நிறுவனம் நீக்கியது. இதனை பார்த்த தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைந்தனர். தனுஷ் தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அணைத்து மொழிகளிலும் கலக்கி வரும் நிலையில், அவரது ட்விட்டர் கணக்கில் உள்ள புளூடிக் நீக்கப்பட்டது ஏன் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

ரசிகர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்த ட்விட்டர் நிறுவனம் உடனடியாக சில மணி நேரத்திலேயே தனுஷிற்கு நீக்கிய அந்த ப்ளூ டிக்கை திரும்பி கொடுத்துவிட்டது. பிறகு ரசிகர்கள் உற்சாகம் ஆனர்கள்.

இதையும் படியுங்களேன்- ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஓகே சொன்ன விஜயகாந்த்… அதுவும் எந்த மெகா ஹிட் படம் தெரியுமா.?!

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

Next Story