Leo Movie: தற்போது எல்லா சோசியல் மீடியாக்களிலும் கேட்கும் ஒரே பெயராக மாறி இருக்கிறது லியோ. நாளை ரிலீஸை ஓட்டி பல சுவாரஸ்ய தகவலும் இணையத்தில் தொடர்ச்சியாக கசிந்து வரும் நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவலும் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் விஜயுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம்மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். இதில் சிலர் ராம்சரண் இப்படத்தில் கடைசியாக கேமியோவாக சில நிமிடம் வருவார் என எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரே ஆசையாக கேட்டு வாங்கிய அந்த பரிசு..! இதுக்கா இவ்வளவு? சண்டைக்கு நின்ற தயாரிப்பாளர்..!
இப்படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் தயாரித்து இருக்கிறார். அனிருத் இசையமைப்பில் இப்படத்தின் மூன்று சிங்கிள் ரிலீஸாகி விட்டது. இதில் மேலும் 2 பாடல்கள் இருப்பதாகவும் அதில் ஒன்று லோகேஷின் ஃபேவரிட் பாடல் என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
அதிலும் பாடல்களே இல்லாமல் தொடங்கிய லோகேஷ் விக்ரமில் 3 பாடல்கள் வைத்து இருந்தார். தற்போது லியோவில் அதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து இருக்கிறதாம். மேலும் எக்கசக்க தீம் மியூசிக்கை அனிருத் களமிறக்கி இருக்கிறராம். லோகேஷ் எல்லா பேட்டியிலுமே லியோவின் முதல் 10 நிமிடத்தினை மிஸ் செய்ய கூடாது என்றே பேசி வருகிறார்.
இதையும் படிங்க: ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் இருக்கிற நடிகர் அஜித்! இவரே சொன்னதுக்கப்புறம் நோ அப்ஜெக்சன் – அடுத்த பாட்ஷாவா?
அதில் பலரின் உழைப்பு இருக்கும் என்று அவர் கூறும் போது எதுவும் ஃபைட் சீனாக கூட இருக்கலாம் என பல எதிர்பார்ப்பு நிலவுகிறது. பல பிரச்னைகளை தாண்டி நாளை காலை 9 மணிக்கு முதல் ஷோ ரிலீஸ் ஆக இருக்கிறது. ரிவியூ எப்படி இருந்தாலும் படத்தின் வசூல் வரும் ஐந்து நாளில் குவிந்து விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறதாம். அதாவது படத்தில் மடோனா செபஸ்டியனும் நடித்து இருக்கிறாராம். எத்தனை பேருப்பா என பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் அவர் விஜயின் தங்கையாக நடித்திருப்பது தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…