நடிகை கீர்த்தி சுரேஷை அசிங்கமாக திட்டிய நபர்.. சினிமா பரபரப்பு!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ரஜினி முருகன், பாம்பு சட்டை, தொடரி, பைரவா ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் இவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தது இன்று முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்த 'அண்ணாத்த' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதையடுத்து தற்போது மலையாளத்தில் மோகன் லாலுடன் சேர்ந்து சேர்ந்து 'மரைக்காயர்' என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ரசிகர் ஒருவர் கீர்த்தி சுரேஷை அசிங்கமாக திட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.
இந்த வீடியோவை பார்த்த மோகன்லால் அதை கீர்த்தி சுரேஷின் அப்பாவிற்கு அனுப்பி போலீசில் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார். இதையடுத்து கீர்த்தியின் தந்தை திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மரைக்காயர் படம் தோல்வி அடையவேண்டும் என்பதற்காக சிலர் இப்படி வீடியோவை வெளியிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.