ஆம்பளையா இருந்தா என்ன போடுடா பாப்போம்.! மிரட்டும் சிம்பு.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நவம்பர்25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. தமிழில் முதன் முதலாக ஒரு லூப் டைம் திரில்லராக இப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியானது அப்படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் திருப்பு முனை அமைந்துள்ளது.
படம் வெளியாகி 3 வாரத்தில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. சிம்பு ரசிகர்களும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதோடு, இப்படத்தில் வெற்றி விழாவையும் படக்குழு சமீபத்தில் கொண்டாடியது.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் இந்திய சினிமாவில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமை இதுவரை விலை போகாத அளவுக்கு விலை போயுள்ளதாம். இந்தியில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் என பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள்.
இதையும் படியுங்களேன்- ‘தேவர் மகன்’ சென்று “முதலியார் மகன்” வந்துவிட்டது.! வரிசைகட்டும் புது புது பிரச்சனைகள்.!
இன்று, தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சிம்பு. கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் பல ஆண்டுகளாக பல்வேறு வகையான கதாபாத்திரங்களைச் தேர்வு செய்து தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் தற்போது இவருக்கு மாநாடு திரைப்படம் மிக பெரிய வெற்றி தந்துள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சிம்புவிற்கு மாநாடு படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளது. அதாவது, மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ தான் அது..அந்த வீடியோவில் சிம்பு ம்முதல் எடுத்தவுடன், "ஒரு பொண்ண அடிக்கிற ஆம்பளையா இருந்தா என்ன அடிடா... என்ன போடுடா பாப்போம் என்று எஸ்.ஜே. சூர்யாவிடம் சத்தமாக கத்தி தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. இதோ அந்த வீடியோ... பாருங்கள் மாநாடு படத்தின் முழு மேக்கிங் வீடியோ..