புதிய படத்தில் இருந்து விலகிய நயன்தாரா... காரணம் என்ன?

by ராம் சுதன் |
nayanthara
X

கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக நடித்து வரும் ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே. ஹீரோவுடன் நடித்தாலும் சரி, சோலோவாக நடித்தாலும் சரி தனக்கென ஒரு வெயிட்டான ரோல் இருந்தால் மட்டுமே நயன்தாரா அந்த படத்தில் நடிக்க ஒப்பு கொள்வார். அதனால் தான் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.

இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் எந்த நடிகையும் தாக்குப்பிடித்ததே இல்லை. அந்த வகையில் நயன்தாரா புது அத்தியாயம் படைத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். அதுமட்டும் இன்றி வயது ஏற ஏற தான் நயன்தாராவின் மார்க்கெட்டும் ஏறி வருகிறது. அந்த வகையில் நயன்தாராவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது நயன்தாரா தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும், ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நயன்தாரா அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

Shraddha Srinath

Shraddha Srinath

தற்போது நயன்தாராவிற்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இப்படத்தில் நாயகர்களாக விதார்த் மற்றும் ஸ்ரீ ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு நாட்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் நயன்தாரா திடீரென படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் தெரியாமல் படக்குழுவினர் குழம்பி உள்ளனர். இந்நிலையில் தான் நயன்தாரா முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கூட லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இளம் நடிகருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என நயன்தாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story