உன் இஷ்டத்துக்கு கேள்வி கேட்க கூடாது!.. அதட்டிய ஸ்ரீப்ரியா.. அதிர்ந்து போன பத்திரிக்கையாளர்!..
1970-80 களில் தமிழ் நடிகைகளில் பிரபலமானவராக இருந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. ரஜினி, கமல் என அப்போது பிரபலமாக இருந்த முன்னணி கதாநாயகர்களுடன் அதிக படத்தில் இவர் ஜோடியாக நடித்துள்ளார். அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஸ்ரீப்ரியா சற்று திமிரான நடிகை என பெயர் பெற்றிருந்தார்.
அவரிடம் பேசவே பலரும் பயப்படும் நிலை இருந்ததாக கூறப்படுகிறது. சில சமயம் முன்னணி நடிகர்களிடமே வாக்குவாதத்தில் அவர் ஈடுபடுவார். எனவே பத்திரிக்கையாளர்களே அவரிடம் பேசுவதற்கு பயப்படுவார்கள். அதிகப்பட்சம் பத்திரிக்கையாளர்கள் அவரிடம் பேட்டி எடுப்பதை தவிர்த்துவிடுவார்கள்.
தற்சமயம் பிரபல சினிமா பத்திரிக்கையாளராக உள்ள செய்யார் பாலு பத்திரிக்கைக்கு புதிதாக வந்த சமயத்தில் நடிகை ஸ்ரீப்ரியாவை பேட்டி எடுக்கும் வாய்ப்பை பெற்றார். அப்போதே பலரும் அவரிடம் எச்சரித்தே அனுப்பியுள்ளனர். அதே போல அவர் சென்று ஸ்ரீ ப்ரியாவை பார்த்தவுடனேயே, எதுக்காக என்ன மட்டும் பேட்டி எடுக்க வந்துருக்க என அதட்டும் வகையில் கேட்டுள்ளார் ஸ்ரீப்ரியா.
பயந்துபோன பத்திரிக்கையாளர்:
செய்யார் பாலு அதற்கு தகுந்த காரணங்களை கூறிய பிறகுதான் அவரை உட்காரவே வைத்துள்ளார் ஸ்ரீ ப்ரியா. பிறகு ”உங்க இஷ்டத்துக்கு எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. சர்ச்சைக்குரிய கேள்விகள் இருந்தால் கோபமாகிவிடுவேன்” என எச்சரித்துள்ளார் ஸ்ரீப்ரியா. அதன் பிறகு நேர்க்காணல் எல்லாம் முடிந்து அந்த பேட்டி அச்சுக்கு செல்வதற்கு முன்பு ஸ்ரீப்ரியாவிடம் காட்டப்பட்டது.
அதை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ஸ்ரீப்ரியா. இப்ப மகிழ்ச்சியா இருக்கீங்க. முதல் முறை வந்தபோது ஏன் மேடம் கோபமா பேசுனீங்க?” என கேட்டுள்ளார் செய்யார் பாலு. இல்ல தம்பி சினிமாவை பொறுத்தவரை பெண்கள் அப்படிதான் இருக்க வேண்டி இருக்கு. அதான் எங்களுக்கு பாதுகாப்பு என பதிலளித்துள்ளார் ஸ்ரீ ப்ரியா.