ஹரித்துவாரில் பிறந்தவர் ஸ்ரேயா. கல்லூரியில் படிக்கும்போதே நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கும்போது பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
முதலில் நடித்தது தெலுங்கு படத்தில்தான். அப்படியே தமிழுக்கும் வந்தார். ஜெயம்ரவி நடித்த மழை திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
அதன்பின் விஜய் உட்பட தமிழில் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்திருந்தார்.
மார்க்கெட் இருக்கும்போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
திருமணத்திற்கு பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அதேநேரம், இப்போதும் நான் கதாநாயகியாக நடிப்பேன் என சொல்வது போல கிளுகிளுப்பான உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், கதாநாயகி வாய்ப்பு அவரை தேடிவரவில்லை. ஆனாலும், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.