உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா. ஆனாலும், ஹிந்தி படங்களுக்கு செல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பக்கம் வந்தவர்.

துவக்கத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்த ஸ்ரேயா அதன்பின் தமிழுக்கு வந்தார். ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்து வெளியான மழை திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார்.

அதன்பின் விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு பல தமிழ் படங்களில் நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்திருந்தார்.

மார்க்கெட்டின் பீக்கில் இருக்கும்போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.

இப்படியே போனால் தன்னை அம்மா நடிகை ஆக்கிவிடுவார்கள் என பயந்தாரோ என்னவோ.. கவர்ச்சி உடைகளில் கிளுகிளுப்பு காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஒட்ட வச்ச துணி போல ஒரு உடையை அணிந்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

