வடமாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.

சில படங்களில் இரண்டாவது கதாநாயகியாக கூட நடித்தார். ஜெயம்ரவி நடிப்பில் உருவான மழை திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

அதன்பின் தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடி போட்டு நடித்தார். விஜய், ரஜினி ஆகியோருடனும் ஜோடிபோட்டு நடித்தார்.

இடுப்பை நன்றாக வளைத்து நடனமாடும் நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். மார்க்கெட்டின் பீக்கில் இருக்கும்போதே திருமணமும் செய்து கொண்டார்.

இவரின் கணவர் ஒரு வெளிநாட்டு தொழிலதிபர் ஆவார். இவருக்கு ஒரு மகளும் பிறந்தது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், திருமணம் செய்து கொண்டதால் அம்மா வேடங்களே கிடைத்து வருகிறது.

எனவே, இப்பவும் நான் கவர்ச்சிக்கு ரெடி என சொல்வது போல கிளுகிளுப்பு உடைகளை அணிந்து போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரேயாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
