பிஞ்சு குழந்தையை இப்படியா பண்றது? ஆபத்தான முறையில் மகளை கொஞ்சிய நடிகை!

by பிரஜன் |
shreya saran
X

shreya saran

நடிகை ஸ்ரேயா சரண் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ!

குழந்தை போன்ற வெகுளித்தனமான நடிகையான ஸ்ரேயா சரண் 2001 ஆம் ஆண்டு வெளியான இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து 2002ல் வெளியான சந்தோசம் என்ற தெலுங்கு படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

அதையடுத்து பாலிவுட் , கோலிவுட் என பிறமொழி படங்களில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து மழை , திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி , அழகிய தமிழ் மகன், கந்தசாமி , குட்டி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2018ல் உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததை ரகசியமாக வைத்திருந்து திடீரென அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

https://www.instagram.com/reel/CV9ypr5AnHX/?utm_source=ig_web_copy_link

இந்நிலையில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தையின் தலை அதிரும் வகையில் தூக்கி போட்டு ஆபத்தாக விளையாடுவதை அனைவரும் எச்சரித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Next Story