இப்படி நின்னா உறைஞ்சி போயிடுவோம்!.. ஸ்டன்னிங் லுக்கில் சுண்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்...
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் உள்ள ஸ்ருதிக்கு தான் ஒரு பாப் பாடகி ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
ஆனால், திரையுலகம் அவரை நடிகையாக மாற்றிவிட்டது. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த ஏழாம் அறிவு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் தொடர்ந்து நடிக்க துவங்கினார். தனுஷ், விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடனும் நடித்தார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார்.
தெலுங்கு நடிகர் பாலையாவுக்கு ஜோடியாக ஸ்ருதி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வசூலில் சக்கை போட்டு போட்டது.
தமிழில் மார்க்கெட் இல்லை என்றாலும் அம்மணிக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. எனவே, ஸ்ருதியும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இத்தாலி நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை காதலித்து வந்த ஸ்ருதி சில வருடங்கள் கழித்து அதை பிரேக்கப் செய்தார். தற்போது சாந்தனு ஹசாரிக்க என்கிற ஓவியரை காதலித்து வருகிறார்.
அதோடு, அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கேன்ஸ் திரைப்படவிழாவுக்கு சென்ற ஸ்ருதி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.