அப்படியே நில்லு.. ஜூம் பண்ணி பாத்துக்குறோம்!.. விதவிதமா காட்டும் ஸ்ருதி ஹாசன்..
கலைஞானி கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே வெஸ்டர்ன் இசையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இசையை படித்தார். ஆனால், திரையுலகம் அவரை நடிகையாக்கிவிட்டது. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் நடிக்க துவங்கினார்.
தனுஷுடன் 3 படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களையே கூச்சப்பட வைத்தார். சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஒருபக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்தார்.
அஜித், விஜய், விஷால், சூர்யா உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கில் இப்போதும் இவர் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கிறது.
பாலையா இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படமே அதற்கு உதாரணம் ஆகும். இப்போது மும்பையில் சாந்தனு ஹாசரிக்கா என்பவருன் லிவிங் டூ கெதரில் இருக்கிறார்.
ஸ்ருதியை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. ஆனாலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.