நான் மிக பெரிய தவறு செய்துவிட்டேன்.! உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்ருதி ஹாசன்.!
மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்தியா முழுவதும் மிக பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் ப்ரேமம். இந்த திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா ஜெபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என பலர் நடித்து இருந்தனர்.
இந்த படம் வெளியான பின்பு தான் மலையாள சினிமாவின் வட்டம் மிக பெரியதானது என்பது நிதர்சனமான உண்மை. இந்த படத்தை தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து ரீமேக் செய்து இருந்தனர். படம் படுதோல்வி அடைந்தது.
இதையும் படியுங்களேன் - ஷங்கர் இவ்வளவு தூரம் இறங்கி வந்துட்டார்.! நீங்களும் வரலாமே சார்.!
அதிலும், சாய் பல்லவி வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து நெட்டிசன்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு உள்ளனார். உண்மையில் ப்ரேமம் ஒரு மேஜிக் அதனை திரும்ப நிகழ்த்துவது முடியாத காரியம். அதனால் தான் அது தெலுங்கை தவிர மற்ற மொழிகளில் ரீமேக் ஆகவில்லை.
இது பற்றி நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தெரிவித்த போது, சாய் பல்லவி வேடத்தில் நான் நடித்திருக்க கூடாது. ரீலீஸ்க்கு முன்பும் ரசிகர்கள் திட்டினர். ரிலீஸ்க்கு பிறகும் திட்டினர். அது நான் செய்த மிக பெரிய தவறு என அண்மையில் ஒப்புக்கொண்டார்.