பளிங்கு சிலை போல உடம்பு.. ஸ்ருதி ஹாசனை எக்குதப்பா வர்ணிக்கும் புள்ளிங்கோ....
நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள்தான் இந்த ஸ்ருதிஹாசன். இசையில் சாதிக்க வேண்டும் என இருந்தவரை சினிமா உலகம் நடிகையாக மாற்றிவிட்டது. சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் 3 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம், விஷாலுடன் பூஜை என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கி அங்கும் முன்னணி நடிகையாக மாறினார்.
தெலுங்கில் ரவி தேவா, பால கிருஷ்ணா, மகேஷ் பாபு, ராம் சரண் என பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் அடிப்பதால் அங்கு அவருக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது. எனவே, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது மும்பையில் தனது காதலருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு இசை கலைஞரை காதலித்து வந்தார். சில வருடங்களில் அது பிரேக்கப் ஆகிவிட்டது.
ஒருபக்கம், பளிங்கு மேனியை பல ஆங்கிளிலும் காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில், கருப்பு நிற உடையில் அழகை காட்டி ஸ்ருதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.