’கட்ஸ்’ஸா பேசிட்டு பைக் ஏறி எடுத்தாங்க பாரு ஓட்டம்!.. ஸ்ருதி நாராயணனின் செயலால் ஷாக்கான ஃபேன்ஸ்!..

by Saranya M |   ( Updated:2025-04-08 01:39:06  )
’கட்ஸ்’ஸா பேசிட்டு பைக் ஏறி எடுத்தாங்க பாரு ஓட்டம்!.. ஸ்ருதி நாராயணனின் செயலால் ஷாக்கான ஃபேன்ஸ்!..
X

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணனின் ஆபசாமான வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாகி வந்த நிலையில் அவர் அதற்காக விளக்கம் அளித்திருந்தார். ஆனால் தற்போது மிடியாவைக் கண்டதும் ஸ்ருதி ஓடிய வீடியோ வெளியாகியிருப்பது ரசிகர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ருதி நாராயணன் மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கி தற்போது கார்த்திகை தீபம், மாரி, சிறகடிக்க ஆசை போன்ற தொடர்களின் மூலம் பிரபலமானார். மேலும், சமந்தா நடித்த சிட்டாடல் ஹனி பன்னி சீரிஸிலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ஸ்ருதி தற்போது கட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ருதி தன் சினிமா வாழ்க்கையில் வளர்ந்து வரும் நேரத்தில் அவரது ஆபாசமான வீடியோ ஒன்று வைரலாகியிருந்த நிலையில், அது எஐயாக இருக்கும் என அதற்கு விளக்கம் அளித்திருந்தார். அதை தொடர்ந்து வந்த அடுத்த வீடியோவிற்கு காரணம் பல படங்களை இயக்கிய இயக்குநர் தான் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது கட்ஸ் பட ஆடியோ லான்சில் பேசிய அவர் நான் இதில் இரண்டாவது ஹிரோயினாக நடித்திருக்கிறேன். ஓவ்வொரு படத்திற்கு ஏற்றதுப் போல் காதாப்பாத்திரங்கள் மாறும், என்னோட கேரக்டர் நான் ரொம்ப டிஃபிகல்டா எஸ்டாபிளிஷ் பண்ணேன், அதுக்கான முழு சப்போட் கொடுத்து இன்ச் பை இன்ச்சா இயக்குநர் ரங்கராஜன் தான் கத்துக்கொடுத்தார் அதற்கு ரொம்ப நன்றி, கட்ஸ் படத்துக்கு உங்க எல்லாருடைய சப்போர்ட்டும் கண்டிப்பா வேணும் என செம தைரியமாக பேசிய ஸ்ருதி நாராயணன், அதன் பினன்ர், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், மீடியாவை கண்டதும் பைக்கில் ஏறி ஓடிய காட்சி வைரலாகி வருகிறது.

Next Story